Movie prime

6ஜி சேவைக்கான சோதனைகள் இந்தியாவில் தொடக்கம்!! பிரதமர் நரேந்திர மோடி!!

 
6g
6ஜி தொலைதொடர்பு சேவைக்கான சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு அலுவலகத்தை திறந்து வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
5g
அதன் பின்னர் பேசிய பிரதமர், இந்தியாவில் மாதந்தோறும் 800 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், அவர் 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்தியாவில் தொலை தொடர்பு துறை, ஆற்றல் துறையாக இல்லாமல் அதிகாரம் அளிக்கும் துறையாக உள்ளது என்றும் கூறினார். இந்தியாவில் 120 நாட்களுக்குள் 125 நகரங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட 5ஜி ஆய்வகங்கள் வரும் ஆண்டுகளில் துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
pm modi
மேலும், 6ஜி அலைவரிசை சேவை குறித்து இந்தியா விவாதித்து வருவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 6ஜி அலைவரிசை சேவையை அமல்படுத்த, இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  2030-க்குள் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.