Movie prime

நாட்டையே உலுக்கி உள்ள பயங்கர ரயில் விபத்து!! பலி 288 ஆக உயர்வு!!

 
train accident
மேற்கு வங்கம் மாநிலத்திற்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் வந்தபோது திடீரென கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. அதாவது, எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி, பக்கவாட்டில் சென்ற சரக்கு ரயில் மீது மோதி உள்ளது.
train accident
இந்த பயங்கர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
train accident
மேலும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 288 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், விபத்து நடந்த இடத்திற்கு 50 ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.