Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
leave
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பூரம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பூரம் நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெறும். எனவே, ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
srivilliputhur
அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இந்த கோவிலில் ஆடிப்பூரம் மற்றும் அதை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
ther
அதனால், இன்று ஜூலை 22 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.