குடும்ப அட்டைக்கு ₹1000!! தமிழக முதல்வர் அறிவிப்பு!!
Nov 15, 2022, 07:06 IST

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும், விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நேற்று தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் நேற்று 14 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும், மழையினால் கடும் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.