மாணவிகளுக்கு 5 ஆம் தேதி முதல் ₹1000 உதவித்தொகை!! முதல்வர் அறிவிப்பு!!
Sep 2, 2022, 07:39 IST

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ₹1000 திட்டம் வரும் 5 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று கோவை திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேத்தியும், திமுக இளைஞர் அணியின் மாநில இணை செயலாளர் பைந்தமிழ்பாரி மற்றும் கீதா தம்பதியின் மகளான நிதிக்கும், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மற்றும் விஜயா தம்பதியின் மகன் கவுசிக் தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண விழா கோவையில் உள்ள பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, நடத்தி வைத்தார். மேலும், பொங்கலூர் பழனிசாமி மற்றும் பர்கூர் எம் எல் ஏ மதியழகன் ஆகியோரைப் பற்றி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 70 சதவீதம் அறிவிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, மீதமுள்ள 30 சதவீத அறிவிப்புகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
வரும் 5 ஆம் தேதி அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதந்தோறும் ₹1000 திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் ₹1000 வழங்கும் திட்டமும் விரைவில் செயலுக்கு வரும் என்று குறிப்பிட்டார்.