Movie prime

1 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு தேதி வெளியீடு!!

 
kids
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளியிலும் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளி இறுதி தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
kids
இந்த அறிவிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
kids
அதன்படி, 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தொடர்ந்து, 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பள்ளிகளின் கடைசி வேலை நாள் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.