Movie prime

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தொடர் விடுமுறை காரணமாக!!

 
bus strike
தமிழகத்தில் திருவிழா நாட்கள், நீண்ட அரசு விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. இந்த சூழலில், தென் மாவட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக பேருந்து வசதிகளை செய்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 500 முதல் 1000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.
bus strike
இந்த விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இந்த புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து துறை சார்பில் இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு, ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

மேலும், கடந்த ஆண்டு இதுபோன்ற புகார்கள் வந்தபோது கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.