Movie prime

1.06 கோடி மகளிருக்கு மாதம் உரிமைத் தொகை வழங்கப்படும்!! தீவிர ஏற்பாடுகள்!!

 
cm women money scheme
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 1.06 கோடி மகளிருக்கு மகளிர் மாத உரிமைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண்களின் நலனில், பெண்களுக்கான உரிமையில் அக்கறை கொண்ட, ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
cm money
தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் உரையின் போது அறிவித்திருந்தார். வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது, முதியோர்களை கவனிப்பது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் 'Universal Basic Income' என்ற பெயரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம், பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 1.06 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
women money scheme
அதன்படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.