Movie prime

இன்று நிறைவடைகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!! முடிவுகள் எப்போது வெளியாகும்??

 
students
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைய உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய படங்களின் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று சமூக அறிவியல் தேர்வுடன் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளது.
exam
ஏற்கனவே 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து, மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
exam
மேலும், தமிழ்நாடு தேர்வுத்துறை ஏற்கனவே தனியார் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனால், குறிப்பிட்ட நாளில் விடைகள் திருத்தும் பணி நிறைவடையும். அதன் பின்னர் வரும் மே 10 ஆம் தேதிக்குள் அனைத்து பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.