Movie prime

தமிழ்நாடு முழுவதும் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!!

 
students
தமிழ்நாட்டில் நடந்து வந்த 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.
exam
இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வை 9,76,000 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 4.67 லட்சம் மாணவர்களும், 4.6 லட்சம் மாணவிகளும் என்று மொத்தம் 9.23 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். புதுச்சேரியில், 7911 மாணவர்களும், 7655 மாணவிகளும் என்று மொத்தம் 15566 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
exam
இதை தவிர 37798 தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 425 மையங்களில் 12639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாத நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.