Movie prime

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain

தமிழநாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

rain

அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.