+12 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!! அமைச்சர் அன்பில் மகேஷ்!!
Mar 16, 2023, 09:45 IST

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், இதுவரை நடந்த தேர்வுகளை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. தேர்வை எழுதாத மாணவ - மாணவிகள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூரில் பொது நிகழ்வுகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, மேலும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
தொடர்ந்து, ஆண்டுதோறும் தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 4.5 முதல் 4.6 சதவீதம் வரை இருக்கும் என்றும் இந்த ஆண்டு சற்று அதிகமாக 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றும் கூறினார். இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடந்து வரும் பொதுத் தேர்வை எழுதாத மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் என்று அனைவருக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான ஊக்கமளித்து வரும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுகளில் பங்கேற்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்ததாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பயமின்றி பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.