Movie prime

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு!! அசத்திய மாமியார்!!

 
125 food feast
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா, சுப்புலட்சுமி என்ற தம்பதியினரின் மகன் சைதன்யா. இவருக்கும் விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ், தனலட்சுமி என்ற தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதனால், பெண் வீட்டுக்கு வந்துள்ளார் மாப்பிள்ளை சைதன்யா. அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள் மற்றும் உணவு வகைகளை சமைத்து பரிமாறி அசத்தி உள்ளார் மாமியார்.
125 food feast
மாப்பிள்ளை சைதன்யா அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார். மேலும், இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியவில்லையாம். ஆனால், ருசியாக உள்ளது என்று தனது வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் சைதன்யா.

தற்போது இந்த வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்துள்ள அசத்தல் மாமியாரின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.