12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!! தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்??
Apr 10, 2023, 08:51 IST

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.3 லட்சம் மாணவ மாணவிகள் எழுதி உள்ளனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளன.

இந்த விடைத்தாள் திருத்தும் பணிக்கான விடைத்தாள் குறிப்பு தயாரிப்பு, முகாம்கள் அமைப்பு போன்ற முன்னேற்பாட்டு பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பணியில் 50,000 க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.