Movie prime

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. 

rain

கடந்த ஜூன் மாதம் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தற்போது சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.