நாட்டின் 15 ஆவது ஜனாதிபதி!! திரௌபதி முர்மு!!
Jul 22, 2022, 06:43 IST

நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் திரௌபதி முர்மு. வருகிற 25 ஆம் தேதி திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார். மேலும், இதன் மூலம் இவரே நாட்டின் முதல் பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஜனாதிபதி என்னும் சிறப்பை பெறுகிறார்.
திரௌபதி முர்மு, 20 ஜூன் 1958 ஆம் தேதி அன்று ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிராஞ்சி நாராயண் டுடு ஆவார். திரௌபதி முர்மு, சியாம் சரண் முர்மு என்பவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவரது கணவர் மற்றும் 2 மகன்களும் இறந்துவிட்டனர்.
இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். முன்னர் ஒடிசா மாநிலத்தின் அமைச்சராக பதவி வகித்தார், பின்னர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவி வகித்தார். ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் இவரே, ஒடிசா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பழங்குடியினரும் இவரே.
பாத்தியா ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 2022 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்வுக்கான அதிகாரப்பூர்வமான வேட்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்மு வரும் 25 ஆம் தேதி இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.