Movie prime

காப்பகத்தில் உயிரிழந்த 3 குழந்தைகள் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி!! முதல்வர் அறிவிப்பு!!

 
stalin
திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ், பாபு மற்றும் ஆதிஷ் ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 6 ஆம் தேதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றதாக கூறியிருந்தார்.
suicide
மேலும், உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கவும்,  உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
amaichar in hos
இதற்கிடையில், இன்று திருப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து  சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.