தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அதன் காரணமாக வரும் 19 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், கடலூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.