Movie prime

அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain

தமிழநாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

rain

அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், கோவை,   மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், இரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை ஆகிய 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.