Movie prime

உத்தரப்பிரதேஷத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் 34 பேர் பலி!!

 
heavy rain
கடந்த சில நாட்களாக டெல்லி, ஹரியானா, இமாச்சல், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சில இடங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.
rain
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பலியாகி உள்ளனர். இது போன்ற, சம்பவங்களால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் பலியாகியுள்ளனர்.
suicide
இந்த தகவலை மீட்பு பனி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவ்வாறு கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்கள் உயிரிழந்துள்ள சமயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.