இன்று முதல் 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை!!

தமிழகத்தில் விஜயதசமி, ஆயுத பூஜை, தசரா விழாக்களை முன்னிட்டு, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும், சரஸ்வதி பூஜை அக்டோபர் 5 ஆம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில், தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதில், அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.