Movie prime

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! அமைச்சர் அறிவிப்பு!!

 
tasmac
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
tasmac
அந்த அறிவிப்பில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு, ₹1,100, விற்பனையாளர்களுக்கு ₹930, உதவி விற்பனையாளர்களுக்கு ₹840 மாதந்தோறும் கூடுதலாக உயர்த்தி 1.04.2023 முதல் வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ₹31.57 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் ₹16 கோடி செலவில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நலநிதி உதவித்தொகை மூன்று லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
minister senthil balaji
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில வாணிப கழக, 1000 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் ₹10.03 கோடி செலவில் பண பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் செயல்பட்டு வரும் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மூட தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.