Movie prime

அக்டோபர் 1 ஆம் தேதி 5 ஜி சேவை!! தொடங்கி வைக்க உள்ள பிரதமர்!!

 
5 g
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் 5 ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. வரும் மாதம் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
5g
அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் 5G சேவைகள் சேர்ந்திடும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இது சம்பந்தமாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5G ஐ அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
pm modi
இந்நிலையில், அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி டெல்லியில் 5 ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.