தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!! மறக்காமல் குடை எடுத்துக்கோங்க!!
Mar 30, 2023, 11:48 IST

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யா வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை முதல் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகப்பட்சம் 34 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.