Movie prime

மகளிர் உரிமை திட்டத்தில் 7 லட்சம் பேர் மேல்முறையீடு!!

 
cm women money scheme
பெண்களின் நலனில், பெண்களுக்கான உரிமையில் அக்கறை கொண்ட, ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் உரையின் போது அறிவித்திருந்தார்.
cm money
வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது, முதியோர்களை கவனிப்பது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் வைத்து இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
magalir urumai thogai
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும் கால கட்டத்தில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.  

இந்நிலையில், விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்  வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவறாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.