Movie prime

கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து!! 12 பேர் உயிரிழப்பு!!

 
nashik accident
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
nashik accident
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து, பின்னர் அந்த தீ மளமளவென பேருந்து முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பேருந்துக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த  விபத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்து தீப்பிடித்து எரிந்தது குறித்து தகவல் அறிந்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று தீயை அணைத்துள்ளனர்.
suicide
இதில் உயிரிழந்த 12 பேரில் ஒரு சிறு குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர கூடும் என்று அஞ்சப்படுகிறது.