வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது!!
Aug 6, 2022, 07:21 IST

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக உள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில், நாளை வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியை ஒட்டி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகவுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுவடைந்து, வங்க கடலின் வடமேற்கு மாநிலங்களில் கன மழையை ஏற்படுத்தும்.

நாளை முதல் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில், இன்று வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.