Movie prime

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்!!

 
monkey
குரங்கு அம்மை நோய் குறித்த பயத்தால், குரங்குகளை கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நோய்க்கு வேறு பெயர் வைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
monkey pox
குரங்கு அம்மை முதன்முதலில் 1958 யில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கடைபிடிக்க படும் வைரஸ்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளுக்கு பெயரிடுவதற்கான நடைமுறைகள் அப்போது இல்லை.

அதனால், எந்தவொரு கலாச்சார, சமூக, தேசிய, பிராந்திய, தொழில்முறை அல்லது இனக் குழுக்களுக்கு குற்றங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும், வர்த்தகம், பயணம், சுற்றுலா அல்லது விலங்கு நலனில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கவும் குரங்கு அம்மை நோயின் பெயர் மாற்றப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
who
வைரஸ்களின் வகைபிரித்தல் பற்றிய சர்வதேச குழு (ICTV) வைரஸின் பெயரை மாற்றும், அதே நேரத்தில் WHO நோயின் பெயரை மாற்றும் என்று கூறப்படுகிறது.