Movie prime

அதிமுகவின் முதல் எம் பி மாயத்தேவர் காலமானார்!!

 
mayathevar
அதிமுகவின் முதல் எம் பி மாயத்தேவர் தனது 88 வயதில் காலமானார். இவர் தான் அதிமுகவுக்கு முதலில் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவர். சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
mayathevar with mgr
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியில் 1934, அக்.15 ஆம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். அதிமுக கட்சியின் முதல் எம்பியான இவர், நேற்று மதியம் அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் எம் ஏ, பி எல் பட்டம் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் மீதான தீவிர பற்றால் அவர் அதிமுகவில் சேர்ந்தார்.

எம்ஜிஆர் அதிமுக கட்சியை தொடங்கிய 6 மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது மாயத்தேவர் இடம், 16 சின்னங்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். அவர் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார்.
iruthi anjali
தேர்தலில் வெற்றி  கிடைத்ததும் எம்ஜிஆர், இரட்டை இலையை அதிமுகவின் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுகவில் இருந்த மாயத்தேவர், கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அப்போது 1980-84 யில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். அதன் பின்னர் அவர் அரசியலை விட்டு விலகி சட்டப்பணிகளை செய்து வந்தார். மாயத்தேவர் உடலின் இறுதி அஞ்சலி இன்று மதியம் நடைபெற உள்ளது.