Movie prime

அதிரடி!! சென்னையில் 144 தடை உத்தரவு!! உச்சகட்ட பரபரப்பு!!

 
admk office
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர். சென்னை ராயப்பேட்டை பகுதியில் கல்வீச்சு, கத்திகுத்து, எடப்பாடி பேனர்களுக்கு தீ வைப்பு என்று போர்க்களமாக காட்சியளிக்கிறது. தடையை மீறி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் நுழைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ops eps
இதற்கு முன்னர் தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அதன் பின்னர் தற்போது பிரச்சார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்  தாக்கியதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உருட்டுக்கட்டை, கம்புகள், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருவதால் அப்பகுதி போர்க்களமாக  காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக, போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சி தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பூட்டி வைத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிரடியாக பூட்டை உடைத்து உள்ளே செல்ல வழி ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சிக் கொடியை ஏந்தியபடி தலைமை அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.