Movie prime

அதிரடி!! வீட்டு வரி, குடிநீர் கட்டணம் அனைத்தையும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்!!

 
online payment
தமிழ்நாட்டில் இன்று டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வகையான வரிகளையும் செலுத்த முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின் போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணையத்தளம் மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டது.
tax
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி மற்றும்‌ சொத்து வரிகளை செலுத்துவதற்கான நடைமுறையை, உரிய மென்பொருள்‌ பயிற்சி அளித்தல்‌ தொடர்பாக செங்கல்பட்டு, கடலூர்‌, ஈரோடு, மதுரை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ ஆகிய ஆறு மாவட்டங்களில்‌ மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட தலா ஓர்‌ ஊராட்சியில்‌, இப்பொருள்‌ தொடர்பாக கிராம ஊராட்சி செயலர்‌ மற்றும்‌ ஒரு கணினி இயக்குபவர்‌ ஆக இரு பணியாளர்களுக்கு மென்பொருள்‌ குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து மாவட்டங்களில்‌ பணியாற்றும்‌ உதவி இயக்குநர்‌ (ஊராட்சிகள்‌, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்‌, ஊராட்சி செயலர்‌, மாவட்ட மேலாண்மை அலுவலர்‌) ஆகியோருக்கு விரிவான முறையில்‌ பயிற்சி அளிக்கப்பட்டு, நிகழ்‌ நேர பரிசோதனை நடத்தி சரிப்பார்க்கப்பட்டது.
pay online
அந்த வகையில்‌, மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம்‌ தேர்வு செய்யப்பட்ட 37 ஊராட்சிகளிலும்‌ பின்னர்‌ வட்டாரத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம்‌ 388 ஊராட்சிகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக தமிழகம்‌ முழுவதற்கும்‌ படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு வரிகேட்பு குறித்து பதிவேடுகளில்‌ உள்ள பதிவுகள்‌ சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில்‌ உள்ளீடு செய்யப்பட்டு, அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள்‌ மீண்டும்‌ ஒருமுறை சரிபார்க்கப்பட்டது.

தற்போது, தேசிய தகவலியல்‌ மையத்தால்‌ நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்‌ மென்பொருள்‌ நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கீழ்காணும்‌ விவரப்படி ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையின்‌ இணையதளம்‌ வழியாக வரியினங்கள் செலுத்தப்படுவதை கிராம ஊராட்சி அளவில்‌ பயன்படுத்திட ஏதுவாக பல்வேறு படிநிலைகளில்‌ பயன்பாட்டுக்கு செயல்படுத்திட வேண்டும்‌.
online banking dreamtime
இணையதளத்தைப்‌ பயன்படுத்தி தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்‌ இன்று டிசம்பர் 15 ஆம் தேதி முதல்‌ வரியினங்கள்‌ வசூலிப்பதை பயன்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டும்‌. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.