Movie prime

இன்று முதல் அரசு பள்ளிகளில் அதிரடி மாற்றங்கள்!! முதல்வர் தொடங்கி வைக்கிறார்!!

 
M.K.Stalin
தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் அதிரடி மாற்றங்களை கொண்டு வரவுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போது 41 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, டெல்லி மாடல் பள்ளிகளாக மாறி அமைக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, யோகா பயிற்சி அளிக்க, நீட் தேர்வுக்கான பயிற்சி, கணினி பயிற்சி, கலை, இசை என்று அனைத்தையும் மாணவர்களுக்கு கற்றுத் தர உத்தரவு.  தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரத்தை அரசு பள்ளிகளிலும் அளித்திட பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
smart school
இதற்காக பல்வேறு புதிய புதிய திட்டங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. அதன் வகையில், தற்போது 41 அரசு பள்ளிகளில் ‘டெல்லி மாடல்’ பள்ளி என்ற திட்டம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

தமிழக முதல்வர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் இணைந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டார். அந்த பள்ளிகளின் நடைமுறைகள் அவரை வெகுவாக கவர்ந்தது.

டெல்லி அரசு பள்ளிகள் போன்ற மாடல் பள்ளிகளாக, தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள் மாற்றப்பட்டிருந்தது. இவற்றில், 26 பள்ளிகள் தகைசால் பள்ளிகள் என்றும், 15 பள்ளிகள் மாதிரி பள்ளிகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
tn and delhi cm
இந்த மாதிரி பள்ளிகளுக்கான தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த  டெல்லி மாடல் பள்ளிகளில், மத்திய அரசு நடத்தும் நீட், ஜே.இ.இ., போன்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் கலை, இசை, யோகா அனைத்திற்கும்  முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.