Movie prime

இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!! பிரதமர் பங்கேற்பு!!

 
pm and cm
இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 42 ஆவது பட்டம் அழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தார், பிரதமர் மோடி. இந்தியாவில் முதல் முறையாக  என்ற பெருமையுடன், பிரமாண்ட ஏற்பாடுகளுடன் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது.
pm modi
இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைத்தார். நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய துவக்கவிழா 7.49 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர், இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தங்கினார்.
anna univ
இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

பின்னர் 11.35 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்லவுள்ளார். காலை 11.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளார்.