Movie prime

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் முழுவதும் இன்று சிறப்பாசிரியர்கள் நியமனம்!!

 
kids
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.  தமிழக அரசு கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
kids
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளனர்.

நடந்து வரும் கல்வியாண்டு 2022-2023 முதல் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
school kids
எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு ஒரு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களையும் நியமிக்கலாம்.

இவர்களுக்கு வழங்கப்படுவது தற்காலிகப் பணி மட்டுமே என்பதை அறிவுறுத்த வேண்டும். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிழைப்பூதியமாக ₹5000 வழங்கப்படும். இவர்களுக்கான பணி நேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என்றும், ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே வேலை நாட்கள்.
kids
இந்த ஆசிரியர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதே சமயம் இன்று அக்டோபர் 14 தற்காலிக சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.