Movie prime

சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!! அமைச்சர் அன்பில் மகேஷ்!!

 
kallakurichi school
கள்ளக்குறிச்சி கனியாமூர் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில், 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 2 வாரங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாணவி தற்கொலை செய்த பின்பு அந்த பள்ளி வளாகத்திற்கு முன்பு அவரின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டமானது மூன்றாவது நாள் கலவரமாக மாறியது. அந்த பள்ளி வளாகமே போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
education minister
இந்நிலையில், அங்கு பயிலும் மற்ற மாணவர்களின் கல்வி தடைபெற்று வருவதால், சூறையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக 9,10,12 ஆம் வகுப்புகள் வேறு ஒரு தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.