Movie prime

மெரினா கடலில் குளிக்க தடை!!

 
marina
ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா அன்று பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்னை மரீனா கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
marina
தை பொங்கல் விழாவில் முக்கிய விழாவான காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்வது வழக்கம். கோவில், கடற்கரை, திரையரங்கம் என அனைத்து இடங்களில் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில், காணும் பொங்கல் அன்று சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். அதனால், காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சென்னை மரீனா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
marina
அதனால், மக்கள் கடலில் இறங்கி குளிக்காத வகையில், கடற்கரையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.