Movie prime

உஷார் மக்களே!! இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!!

 
cyclone
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியில் இருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முதலில் வடகிழக்கு பருவமழை, பின்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி என்று தொடர்ந்து பல காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
rain
அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. தற்போது, இந்த கனமழை மேலும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த வாரத்தில் கனமழை காரணமாக 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
மேலும், தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அன்று தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.