தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பள்ளிக்கு விடுமுறை!!
Sep 13, 2022, 11:37 IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி அழைப்பில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
உடனே, பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், காவல் துறையினரிடம் இது குறித்து உடனடியாக தகவல் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி வளாகம் முழுவதுமாக மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.