Movie prime

முக்கிய அறிவிப்பு!! காரைக்கால் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு நாளை விடுமுறை!!

 
holiday

தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியே உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே திருவிழா நடைபெறும். 

karaikal

இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆயிரங்காளி அம்மனை தரிசிக்க முடியும். அதனால், பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள். 

karaikal

அதனால், பக்தர்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக நாளை (ஜூன் 8 ) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.