Movie prime

முக்கிய அறிவிப்பு!! இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

 
holiday
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் உதகையில் மே, ஜூன் மாதங்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். பல சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்த மலர் கண்காட்சிக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து இருந்தது.
doddabetta
இந்நிலையில் இந்த ஆண்டின் மலர் கண்காட்சி இன்று நடைபெற இருக்கிறது. இன்று 124 ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
flower show
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஜூன் மாதம் 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.