Movie prime

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழகத்தில், 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், 21 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
rain
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும்.
rain
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யக்கூடும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை நிலவரப்படி, பெரம்பலூர் மாவட்டம், இலப்பைக்குடிக்காடு பகுதியில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.