Movie prime

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
rain
மேற்கு திசை காற்று வேகத்தின் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை போன்ற வடதமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
rain
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
rain
11 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளில் போன்ற பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.