Movie prime

செஸ் ஒலிம்பியாட் பதாகைகள் வழக்கு!! உயர் நீதிமன்ற தீர்ப்பு!!

 
pm modi
சென்னையில் இன்று மாலை  மணிக்கு 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதை தொடங்கி வைப்பதற்காக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் படங்கள் இடம் பெறவில்லை.
chess
இதன் காரணமாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு, இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அந்த வழக்கில், பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

மேலும், 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒரு சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இன்று மதியம் விசாரணைக்கு வந்த வழக்கின் தீர்ப்பு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
madurai high court branch
மோடியின் புகைப்படங்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் வைக்கப்படாதது நேற்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.