Movie prime

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா!! நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

 
chess
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 4வது சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
mamallapuram
இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
pm modi
இதில், பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகளின் நிறைவு விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (9 ஆம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.
M.K.Stalin
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மேலும் பல்வேறு நாடுகளை சார்ந்த செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
nehru stadium
மதியம் 1 மணி முதல் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது. அந்த வழியாக வரும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம்.

ஈ.வி.கே சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

மேலும், வணிக வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, கெங்கு ரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதி கிடையாது.
raja muthaya road
பிராட்வேயில் இருந்து வரும் வணிக வாகனங்கள் குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடைந்து கொள்ளலாம்.

வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.