Movie prime

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை!!

 
M.K.Stalin
இன்று சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியாக நியமிக்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
kalaivanar arangam
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.

அனைத்து துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். மேலும், துறைவாரியான வருங்கால திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
stalin meeting officials
மேலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.