நாளை ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய குறைதீர் முகாம்!!
May 13, 2022, 12:24 IST

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், ,செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிப்பது போன்றவை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நடைபெற தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்ய நாளை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே மக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் நாளை நடக்கும் முகாமில் பங்குபெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதம் தோறும் மக்கள் குறைதீர் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அவ்வகையில் சென்னையில் உள்ள உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் இந்த குறைதீர் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.