Movie prime

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

 
savuku sankar
தமிழில் அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர். இவர் அவ்வப்போது, அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பாக பேசப்படுபவர்.
savuku sankar
மேலும், அவரது இணையதளத்தை பல முறை மூடும் உத்தரவை உயர்நீதி மன்றங்கள் வெளியிட்டுள்ளன. ஆனாலும், தொடர்ந்து, இவர் அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் கருத்துக்களை வெளியிட்டுவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில், தற்போது அவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.