சிலிண்டர் விலை ₹25.50 குறைப்பு!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலைகள் தினசரியும் சமையல் எரிவாயு விலைகள் மாதம் ஒரு முறையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்த வகையில், இன்று அக்டோபர் மாதம் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹25.50 குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன.
இதனால், சென்னையில் இன்று முதல், ₹2,045க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ₹25.50 ஆக குறைக்கப்பட்டு, ₹2,009.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் தலைநகர் டெல்லியில் இன்று முதல், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ₹1,885லிருந்து ₹25.50 குறைத்து ₹1,859க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாதத்தில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஜூலை 6 ஆம் தேதி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ₹50 உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.