Movie prime

வாக்காளர் பட்டியல் திருத்தம்!! இன்று சிறப்பு முகாம்!!

 
voter id que
இன்று வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
voter id
அந்த குறிப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 2023 ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைபவர்கள் படிவம் 6, பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7 ஆகியோர் படிவங்களை பூர்த்தி செய்து முகாமில் வழங்கி, திருத்தும் மேற்கொள்ளலாம்.

மேலும், ஒரு தொகுதிக்குள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தோர், மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தோர் படிவம் 8 ஆகியோரும் படிவங்களை பூர்த்தி செய்து முகாம்களில் வழங்கி, திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

தொடர்ந்து, நவம்பர் மாதம் 13, 26, 27 ஆகிய தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் வாக்காளர் அட்டையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு பயனடையலாம்.
mugaam
மேலும், பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.