வீட்டு உபயோக சிலிண்டரின் டெபாசிட் கட்டணம் ₹1,450ல் இருந்து ₹2,200 ஆக அதிகரிப்பு!! எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!!
Updated: Jun 16, 2022, 08:54 IST

புதிய சிலிண்டர் இணைப்பு வாங்குவதற்கான டெபாசிட் கட்டணம் ₹750 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரெகுலேட்டர் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாமானியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ₹750 உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் ₹1,450 இல் இருந்து ₹2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கு டெபாசிட் கட்டணம் ₹800 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டணமும் இப்போது ₹1,150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரெகுலேட்டர் விலையும் ₹150 இல் இருந்து ₹250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தொடரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.